Skip to main content

கொடுவா - மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நிதின்சத்யா

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Kodua - Nitin Sathya playing the lead role again

 

'சென்னை28’, 'சத்தம் போடாதே', ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நிதின் சத்யா. கடைசியாக 2019-ல் ஆரவ் நடிப்பில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரிப்பில் இதுவரை 'ஜருகண்டி' மற்றும் 'லாக்கப்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. 

 

இந்நிலையில் நிதின் சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'கொடுவா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினரோடு இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

 

ராமநாதபுரம் பகுதியில், இறால் வளர்ப்பு பணியைச் செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை மய்யமாக வைத்து 'கொடுவா' படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொடுவா' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

koduva first look released

 

'சென்னை28’, 'சத்தம் போடாதே', ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நிதின் சத்யா. கடைசியாக 2019-ல் ஆரவ் நடிப்பில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரிப்பில் இதுவரை 'ஜருகண்டி' மற்றும் 'லாக்கப்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

 

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு  நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'கொடுவா'. துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

இந்த நிலையில் 'கொடுவா' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

"அடியாத்தி இது என்ன ஃபீலு" - தனுஷால் ஃபெயிலான சம்யுக்தா

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

dhanush starring vaathi movie Vaa Vaathi Lyrical song released

 

தனுஷ், நேரடியாகத் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத் தமிழில் 'வாத்தி' எனத்  தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வா வாத்தி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலைப் பார்க்கையில், கதாநாயகி சம்யுக்தா வாத்தியாராக வரும் தனுஷ் மீது ஒரு தலையாகக் காதல் கொள்கிறார். அந்தக் காதலை விவரிக்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாடலில் வரும் 'அடியாத்தி இது என்ன ஃபீலு... உன்னால நான் ஃபெயிலு...' என இடம்பெறும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலுக்கு தனுஷ் வரிகள் எழுத ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ஏற்கனவே தனுஷ் இப்பாடலைப் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்தப் பாடலின் லிரிக் வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.