Skip to main content

"காலம் கடந்து நீடிப்பவர்" - கமல்ஹாசன் இரங்கல்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

kamal about rs shivaji passed away

 

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த, நடிகர் ஆர்.எஸ். சிவாஜி (67) காலமானார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசிய 'சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...' என்ற வசனம் மக்கள் மனதில் பிரபலமானதாக இருந்தது. 

 

அதைத் தாண்டி வில்லன், ஆயுத எழுத்து, சூரரைப் போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் நேற்று (01.09.2023) வெளியான லக்கி மேன் படத்தில் நடித்துள்ளார். மேலும் வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். 

 

இந்நிலையில், சென்னையில் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக சிவாஜி மரணமடைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்சன் திலீப்குமார், அவரது எக்ஸ் தள பக்கத்தில் "கோலமாவு கோகிலா படத்தில் பணியாற்றிய போது சிவாஜியுடைய நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்கிறேன்" என குறிப்பிட்டு அவரது இரங்கலை தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் கமல்ஹாசன், "எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்