Skip to main content

"பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை அது"- அமைச்சர் கடம்பூர் ராஜூ 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
kadambur raju

 

ஜே.ஜே. பெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகா நடித்து, சூர்யா தயாரித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியாவதாக இருந்தது. கரோனா தோற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மே மாதம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக இருக்கிறது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே பெரும் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பு படங்கள்  இனி வெளியாகாது என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இது பற்றி கேட்டபொழுது "பாதிக்கப்படுகின்றவர்கள், அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் அவர்கள் கருத்தினை கூறுகின்றனர். தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பையும் போனில் அழைத்து பேசினேன். இது இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதால் அரசு அதற்கு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன ரகசியம்..? அண்ணாமலைக்கு பயமும் பதற்றமும் ஏன்?” - கடம்பூர் ராஜு விமர்சனம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

kadambur raju talk about annamalai

 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

 

இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக்கொண்ட, கூட்டணி தர்மத்தை போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம் என கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். 

 

இது தொடர்பாக பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “பாஜகவில் இருந்து விலகியவர்கள் திமுகவில் சேர்ந்திருந்தால் அண்ணாமலை என்ன செய்திருப்பார். நிர்மல் குமார் ஏதோ பிடிக்காமல் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்திருக்கிறார். இதற்கு அண்ணாமலை முதலில் எங்கு சென்றாலும் வாழ்க என்றார். அப்போது சரி அண்ணாமலையின் கருத்து நாகரீகமாக இருக்கிறதே, அரசியலில் அவர் பக்குவப்பட்டுவிட்டார் என்று நினைத்தோம். ஆனால், இன்றைக்கு அவர் தெரிவித்திருக்கும் கருத்து அதற்கு மாறாக, அவர் இன்னும் பக்குவப்படவில்லை போல் தோன்றுகிறது. அண்ணாமலைக்கு ஏன் இந்த பயமும் பதற்றமும். நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன ரகசியம் இருக்கிறது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ரகசியம் இருந்தால் அதை அதிமுகவில் சொல்லிவிடுவாரோ என்று பயப்படுகிறாரா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு அவர்தான் தெளிவாகப் பதில் சொல்லவேண்டும்” என்று விமர்சித்துள்ளார். 

 

 

Next Story

“நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வந்தாலும் தொண்டர்களின் தீர்ப்பு ஒன்று தான்” - கடம்பூர் ராஜு

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

"Whatever the verdict of the court, the verdict of the volunteers is the same." Kadampur Raju

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தொண்டர்களின் தீர்ப்பு இ.பி.எஸ்.க்கு தான் என அதிமுக முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

 

எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமக, மதிமுக இரு கட்சிகளுக்கும் தேர்தல் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. 98 ஆம் ஆண்டில் அதிகமான வாக்கு வாங்கி உள்ள கட்சியாக தமிழகத்தில் அதிமுக தான் இருந்தது. அவர்கள் கட்சிக்கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக நம்மால் தான் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் அங்கீகாரம் என்று கொடுத்தது அதிமுக தான். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரத்தைப் பெற்று தந்தது அதிமுக. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. அதை அவர்களும் மறுக்க முடியாது.

 

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை நாட்டிற்கு அடையாளம் காட்டிய கட்சி அதிமுக தான். எம்.ஜி.ஆர் முதன்முதலாக ஆட்சிக்கு வரும்பொழுது சாத்தூர் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து இரண்டாவது முறை வெற்றி பெற்ற பிறகு அமைச்சராக அவர் வருவதற்கு ஜெயலலிதா தான் காரணம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அமைச்சராகப் பரிந்துரை செய்தவரே ஜெயலலிதா தான்.

 

செய்தியாளர்கள் சந்திப்பை அதிகமாக நிகழ்த்துவது அண்ணாமலை தான். நாள் முழுவதும் ஊடகங்களில் வருகிறார் என்றால், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வாடிக்கையாகவும் வழக்கமாகவும் வைத்துள்ளார் .அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி அடுத்தவர்கள் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது.

 

தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சி தான் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராகப் பதவியேற்பார். இதைப் பொறுக்காமல் அதிமுகவைப் பிளவுபடுத்துவதற்காக சில தீய சக்திகள் முயற்சிக்கிறது. ஆனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 98 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

 

தீர்ப்பு இன்று அல்லது நாளை வரலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் சரி, தேர்தல் தீர்ப்பு வந்தாலும் சரி, மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் தீர்ப்பு என்ன என்று கேட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்குத் தான். தீர்ப்பு வருவதற்கு முன்பே அதைப் பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. தீர்ப்பு வரும் வரை பொறுப்போம். தீர்ப்பு நியாயத்தின் பக்கம் தான் வரும். எந்தப் பக்கம் அதிகமாக மெஜாரிட்டி இருக்கிறது என்பது நாட்டிற்குத் தெரியும். அதை மனதில் வைத்து தான் தீர்ப்பு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.