Skip to main content

'ஜகமே தந்திரம்' படக்குழு வெளியிட்ட அறிவிப்பு.... அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

dhanush

 

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தளத்தில் மிக விரைவில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசரை, நெட்பிளிக்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘ஜகமே தந்திரம்’ படத்தினைத் திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த தனுஷ் ரசிகர்கள், இச்செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்