Skip to main content

திடீர் ரெய்டு; புஷ்பா பட இயக்குநர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

IT raids on offices of Sukumar and Mythri movie makers company

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் தயாரிப்பு நிறுவனம் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்'. இந்நிறுவனம் இப்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2', ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படம் மற்றும் ராம்சரணின் 16வது படம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. 

 

இந்த நிலையில் வருமான வரித்துறையினர் இந்தாண்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக இன்று சோதனை நடத்தினர். மேலும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதனால் ஹைதராபாத்தில் நடந்த புஷ்பா 2 படப்பிடிப்பை இன்று நிறுத்திவிட்டார் சுகுமார். 

 

இயக்குநர் சுகுமார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரங்கஸ்தலம், புஷ்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதோடு எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பல சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்  சுகுமார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஹனுமன்’ - புது அப்டேட் வெளியீடு 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
jai hanuman new update

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியானது. பின்பு டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகிவருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா, அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு படத்தை எடுக்கவுள்ளார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் முந்தைய காலகட்டத்தில் நடப்பதை பற்றி இருக்குமென ஹனுமான் படத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம். இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகவுள்ளது. படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது குறிப்பிடதக்கது. 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.