Skip to main content

20 படங்களுக்கு ஐம்பது ரூபாய்தான் டிக்கெட் விலை!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

theatre

 

 

கரோனா அச்சுறுத்தலால் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், உரிய பாதுகாப்பு வசதிகளுடன் 50 சதவித இருக்கைகளை கொண்டு மீண்டும் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதனை தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி முதல் மும்பையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், திரையரங்கிற்கு பார்வையாளர்கள் பெரிதாக வரவில்லை.  

 

இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு வரவழைக்க, கபீ கபீ, ஸில்ஸிலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹாய், வீர் ஸாரா உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை, ஒய் ஆர் எஃப் பெரிய திரைக் கொண்டாட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் வெளியிடுகின்றனர். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் 50வது வருடம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

திரையரங்குகளுக்கு உதவும் வண்ணம் இந்தத் திரைப்படங்கள் எதற்கும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்போவதில்லை. யாஷ் ராஜ் தரப்பும், விநியோகஸ்தர்களும், மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று விரும்புவதால் இந்த அத்தனை பழைய படங்களுக்கும் ரூ.50 மட்டுமே டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மனன் மேத்தா தெரிவிக்கையில், "எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்த வரை மக்களின் மகிழ்ச்சி தான் எங்கள் உலகின் மையப் புள்ளி. எங்களது 50வது வருடத்தை முன்னிட்டு இந்தப் பெரிய திரைக் கொண்டாட்டத்தை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது ரசிகர்கள் எங்களின் பல பிரபலமான, மறக்க முடியாத திரைப்படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்த்து அந்த அனுபவத்தில் திளைக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.