Skip to main content

லதா ரஜினிகாந்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
court granted bail to latha rajinikanth regards kochadaiyaan issue case

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து லதா ரஜினிகாந்த், அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்தது. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியது. மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதோடு மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்த மோசடி வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இன்று நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, லதா ரஜினிகாந்த்தின் பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“43 ஆண்டுகள்...” - பெற்றோர் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
soundarya rajinikanth about his parents

சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.

இதையடுத்து மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. பின்பு ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் 43வது திருமண நாள் கொண்டாடியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “43 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா மாற்றிக் கொண்ட செயின் மற்றும் மோதிரங்களை ஒவ்வொரு ஆண்டும் அப்பாவை அன்புடன் அணியச் செய்கிறார். உங்கள் இருவரை மிகவும் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ரஜினிகாந்த் - லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.