Skip to main content

இந்தியாவின் பதிலடியும்...பிரபலங்களின் வாழ்த்து மழையும்...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவரான யூசுப் அசார் கொல்லப்பட்டார்.
 

இந்திய வான்படையின் இந்த தாக்குதலுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்த பிரபலங்களின் பதிவுகளை பார்ப்போம்...
 

இயக்குநர் ராஜமௌலி: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்.
 

ரஜினிகாந்த்: சபாஷ் இந்தியா.
 

சித்தார்த்: ஒரு நாட்டுடன் போர் புரியும் அளவுக்கு பாகிஸ்தானிடம் அரசியல் ஒற்றுமையும் இல்லை, ராணுவ ஒழுங்கும் இல்லை, பொருளாதார பலமும் இல்லை. கொலைகாரர்களையும், பயங்கரவாதிகளையும் பாதுகாப்பதையும் நிறுத்துங்கள். வரலாறு தானாக மாறும். ஜெய்ஹிந்த்.
 

மகேஷ் பாபு: நம் இந்திய விமானப்படையை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். வீரர்களுக்கு சல்யூட்.
 

வரலட்சுமி சரத்குமார்: வீரர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். முடிந்தவரை மனிதர்களாக நடந்துகொண்டதற்கும், அப்பாவிகளைத் தாக்காமல் இருந்ததற்கும் நன்றி.
 

ரகுல் ப்ரீத் சிங்: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.
 

ஜுனியர் என்.டி.ஆர்: சரியான பதிலடியை நம் நாடு கொடுத்திருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சல்யூட், ஜெய்ஹிந்த்.
 

கார்த்திக் சுப்புராஜ்: தொட்டவனை விட்டதில்லை! இந்திய விமானப்படைக்கு பெரிய சல்யூட். 
 

ரம்யா: என் நாடு, என் பெருமை, நமக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கும், துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.


 

சார்ந்த செய்திகள்