Skip to main content

ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் சங்க மோதல்- மூத்த பத்திரிகையாளர்கள் விளக்கம்

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

தமிழ் சினிமா பத்திரிகையாளர்களில் மிக அனுபவம் வாய்ந்த இருவர் பிஸ்மி, அந்தனன். அச்சு, தொலைக்காட்சி, யூ-ட்யூப் என அனைத்து வடிவங்களிலும் தங்கள் பங்களிப்பை செய்து வருபவர்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இனிமேல் வெளியாகும் படத்திற்கு எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன என்று இவ்விரு மூத்த சினிமா பத்திரிகையாளர்களிடம் கலந்துறையாடியபோது அவர்கள் தெரிவித்தது. 
 

bismi

 

 

பல வருடங்களாக இந்த துறையில் இருந்திருக்கிறீர்கள். இதுபோல இதற்கு முன்னர் நடந்ததுண்டா?

விமர்சனம் என்பது தமிழ் சினிமாவில் தவிற்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. தயாரிப்பு நிறுவனம் ஒருவரை டார்கெட் செய்துதான் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த ஒருவர் யார் என்று நாம் சொல்ல தேவையில்லை. ஏற்கனவே அவர் விமர்சனம் செய்து பெரியாளாகிதான் இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் தான் அவர். 96 என்று ஒரு படம். அந்த படத்தை உலகமே கொண்டாடியது. ஆனால், அவர் அந்த படத்தை கழுவிதான் ஊற்றினார். இருந்தாலும் அந்த படம் அதை மீறியும் ஓடியதா இல்லையா? ஆக நல்ல படங்களை நீங்கள் எவ்வளவு மட்டம் தட்டினாலும் ஓடும். இதற்கு இவர்கள் இவ்வளவு ரியாக்ட் செய்யவே அவசியமில்லை. 
 

இத்தனை வருடங்களாக விமர்சனங்களை கொண்டாடிய தமிழ் சினிமா, ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த விமர்சகர்களையும் பகைத்துக்கொள்கிறதா?

அப்படிதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர் தரக்குறைவாக பேசுகிறார். அவருடைய ஸ்லாங் தவறாக இருக்கிறது என்றால் அவரை தவிர்த்துவிடலாம். இத்தனை கோடி பணம் போட்டு படம் எடுப்பவர்கள். தன்னுடைய படத்தை பற்றி நல்லவிதமாக பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. தற்போதைய காலத்தில் கடவுளையே விமர்சிக்கிறார்கள். அத்திவரதர் பற்றி சமீபத்தில் நான் எவ்வளவு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் படித்திருக்கிறேன். விமர்சனத்திற்கு உட்படாத விஷயங்களே இல்லை என்றபோது என்னுடைய படத்தை விமர்சிக்காதீர்கள் என்று சொல்வது ஒரு தவறான முன்னுதாரணம். 

 

 

சார்ந்த செய்திகள்