Skip to main content

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

அட்லி, விஜய் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 

bigil

 

 

தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது. தற்போது இப்பாடல் செம வைரலாகி வருகிறது.
 

அண்மையில் இப்படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார். 

 
இந்நிலையில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜய் தன்னுடன் பணியாற்றிய பிகில் படக்குழுவினர் 400 பேருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார். தற்போது 95 சதவீத பிகில் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகவும், விஜய் தற்போது டப்பிங்கை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 130 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24ந் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 24ந்தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்