Skip to main content

பாக்ஸ் ஆபீஸ்; உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்டில் முன்னேறும் 'அவதார் 2'

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

avatar 2 worldwide box office collection

 

உலகப்புகழ்பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் கடந்த 16 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் ரூ.160 கோடியையும், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியையும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகளவில் அதிக வசூல் செய்த லிஸ்டில் அவதார் 2 படம் (1.025 பில்லியன் டாலர்), வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் ($1.908 பில்லியன்), இரண்டாம் இடத்தில் டாப் கன்: மேவரிக் ($1.489 பில்லியன்), மூன்றாம் இடத்தில் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் ($1.001 பில்லியன்) உள்ளது. 

 

'அவதார் 2' படம் இந்தியாவில் மட்டும் தற்போது வரை ரூ.335 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்