Skip to main content

'காட்டுலே... காட்டுலே...' - ட்ரேட் மார்க் ஹரி ஸ்டைலில் வெளியான 'யானை' பட க்ளிம்ஸ்

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

arun vijay 'yaanai' movie glimpse video released

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. 'ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி  பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'யானை' படத்தின் க்ளிம்ஸ் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வழக்கமான ஹரி படம் போல் பரபரப்பான காட்சிகள், அடுக்குமொழி வசனங்கள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் உள்ளிட்டவை இந்த க்ளிம்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ளது. இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்