Skip to main content

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு வரிசையில் இணைந்த 'ஆகாஷ் வாணி'... இணையத்தில் கவனம் ஈர்க்கும் டீசர் 

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Akash vaani teaser goes viral

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து, வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஈநாக் அபில் இயக்கத்தில் ஆகாஷ் வாணி என்ற இணைய தொடரில் கவின் நடித்துள்ளார்.  இதில், கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிக்கா ஜான் நடிக்கிறார். சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் நேற்று  டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த தொடரின் டீசர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.