Skip to main content

'இதுவரைதான் நான் உயிரோடு இருப்பேன்' - ஜாதகத்தை வைத்து மரணத்தை கணித்துக் கூறிய கவிஞர் பிறைசூடன்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Piraisoodan

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், அண்மையில் மறைந்த கவிஞர் பிறைசூடன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கவிஞர் பிறைசூடனின் உண்மையான பெயர் சந்திரசேகர். தஞ்சை மாவட்டம் நன்னிலம்தான் அவருடைய சொந்த ஊர். 1982 காலக்கட்டத்தின்போது ஒரு படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக பிறைசூடனை நான் சந்தித்தேன். நான் நடித்த படத்தில் அவரும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அப்போது தமிழ் வரலாறு, ஜோதிடம், நாடி ஜோதிடம் குறித்து பல்வேறு விஷயங்கள் கூறினார். இவ்வளவு அறிவு உள்ள ஒருவர் எதற்காக நடிக்க வந்திருக்கிறார் என்று யோசித்தேன். அதன் பிறகுதான் அவர் கவிதை எழுதுவார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய ‘சிறை’ படத்தில்கூட பாடல்கள் எழுதியிருக்கிறார். 

 

ad

 

என்னுடைய திருமணத்தின்போது பெரிய கவிதை ஒன்று வாசிக்கப்போகிறேன் என்றார். நானும் அனுமதி கொடுத்தேன். என்னை வாழ்த்தி மேடையில் ஒரு கவிதை வாசித்தார். மேடையில் இருந்த காளிமுத்து, கல்யாணசுந்தரம், என்.டி. சுந்தரவடிவேலு உட்பட அனைவரும் அந்தக் கவிதையை ரசித்தார்கள். பின்னர், தன்னுடைய பெயரை பிறைசூடன் என மாற்றி படிப்படியாக முன்னுக்கு வந்தார். ஆரம்பக்காலங்களில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து நிறைய விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார். 

 

எதையுமே வெளிப்படையாக பேசிவிடும் குணம் கொண்டவர் பிறைசூடன். சுயமரியாதை மிக்கவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், 1400க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், 5000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியுள்ளார். புராணப்படங்களுக்கு மிகச்சிறப்பாக வசனம் எழுதக்கூடியவர். அவர் இறந்துவிட்டார் என்ற திடீர் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிறைசூடன் மரணம் குறித்து அவருடைய மகன் கூறிய விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. அவர் பிறந்தது 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி. 65 வருடங்கள் நான்கு மாதங்கள் 11 நாட்கள்தான் நான் உயிரோடு இருப்பேன் என்று முன்னரே பிறைசூடன் கூறினாராம். அவர் சொன்ன கணக்கிலிருந்து 4 மாதங்கள்தான் கூடுதலாக வாழ்ந்துள்ளார். ஒருவர் 60 வயதைக் கடந்து நல்லபடியாக வாழ்ந்து தன்னுடைய சொந்த வீட்டிலேயே மரணமடைவது என்பது மிகப்பெரிய பாக்கியம். அந்தப் பாக்கியம் பிறைசூடனுக்கு கிடைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைமாமணி ராஜேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, கமல்

Published on 21/09/2022 | Edited on 22/09/2022

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தார் கலைமாமணி நடிகர் ராஜேஷ்.
ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் திரைத்துறை வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசையிருந்தது; அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்

 

திரைத்துறையில் இயற்கையான நடிகர் என்று பாராட்டப்பட்ட ராஜேஷ் சுமார் 45 ஆண்டுகளில் 150 படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார்.

 

நக்கீரன் யூடியூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேர்காணல் செய்திருந்தார். நான்கு தொடராக வந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு  நியமித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கலைமாமணி நடிகர் ராஜேஷை நேரில் அழைத்தது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவித்து, நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனும் நடிகர் ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் பொறுப்பேற்று கொண்டதை அறிந்த சிவகுமார், தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் நடிகர் ராஜேஷுக்கு வழங்கி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

tamilnadu goverment appointed actor rajesh as a head of tamilnadu goverment m.g.r film training centre

 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.