16 ஆவது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி நேற்று ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது இதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்தார். மேலும் இந்த போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விராட் தனது பழைய ஆட்டத்திற்கு முழுதாக மாறியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இந்த இறுதிப்போட்டி இந்தியாவின் டாப் ஆர்டருக்கும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்ற அவர் இந்திய அணியைக் குறித்தும் பேசினார். இந்திய அணி 1990களையும் 2000தையும் ஒப்பிடுகையில் வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியை இந்தியா உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். இந்திய அணி பும்ராவை இழக்கும் என்று கூறிய அவர் அந்த இழப்பை முகமது ஷமி ஈடு செய்வார் என்றும் கூறினார்.
மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர், கோலி ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். ஹைதராபாத் அணிக்காக அவர் சதமடித்ததை அனைவரும் கண்டனர். ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் எனக் கூறிய அவர் சுழலுக்கும் உதவலாம் என்றும் கூறினார். டாஸ் என்னவாக இருந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். ராகுலுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இஷான் கிஷான் இந்திய அணிக்கான துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.