Skip to main content

மும்பை வரலாற்றுச் சாதனை; பெங்களூருவிடம் வெற்றியைப் பறித்த சூர்யா

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Mumbai's historic feat; Surya stole victory from Bengalur

 

16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 54 ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.

 

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 65 ரன்களையும் மேக்ஸ்வெல் 68 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் பெஹ்ரெண்ட்ராஃப் 3 விக்கெட்களையும் க்ரீன், ஜோர்டன், கார்த்திகேயே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

பின் 200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும் வதேரா 52 ரன்களையும் இஷான் கிஷன் 42 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணி சார்பில் ஹசரங்கா மற்றும் விஜயகுமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

நடப்பு சீசனில் ரோஹித் சர்மா தனது கடைசி 5 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து வருகிறார். சூர்யகுமார் இன்றைய போட்டியில் 83 ரன்களை குவித்தார். இதுவே ஐபிஎல் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த வீரர் ஆனார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி  3 முறை 200+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு அணி ஒரு சீசனில் மூன்று முறை 200+ சேஸ் செய்து வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.