Skip to main content

'கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் முன்'... தோனி குறித்து முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019


தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கூறியுள்ள கருத்து ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குப் பின், தோனியின் ஓய்வு குறித்து பலரும், பலவிதமாக கூறிவருகின்றனர். ஆனால் இதுகுறித்து தோனி தனது கருத்தை, இதுவரை பதிவு செய்யவில்லை.  இந்நிலையில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இந்தியா டுடேவுக்கு  அளித்தப் பேட்டியில், 'தோனி மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரின் எதிர்காலம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தோனிக்கு தற்போது 38 வயதாகிறது. அடுத்த வருடம் டி20 உலக கோப்பையில் அவருக்கு 39 வயது ஆகி விடும்.
 

df



எனவே தோனி ஓய்வு பெற, இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகச்சிறந்த வீரர் உலக அளவில் அவருக்கு இருக்கும் ரசிகர்களில், நானும் ஒரு ரசிகன் தான். அவருடைய பேட்டிங், கேப்டன்ஷிப் மற்றும் களத்தில் அவர் செய்யும் அனைத்து செய்கைகளும் எனக்கு பிடிக்கும். இருப்பினும் அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. எனவே தேர்வு குழுவினர் அவரை ஒதுக்கும் முன், தானாக முன்வந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், தோனிக்கு நல்லதாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.