Skip to main content

2010 வரலாறு மீண்டும் திரும்புமா? சென்னை அணி ரசிகர்கள் ஏக்கம்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

csk players

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் கடுமையாகத் தடுமாறி வருகிறது.

 

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. முன்னணி வீரர்களின் நிலையான ஆட்டமின்மை சென்னை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் சென்னை அணி கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போதும் சென்னை முதல் 7 போட்டிகளில், 2 வெற்றிகள், 5 தோல்விகள் கண்டது. அதன்பின்பு, அதிரடி எழுச்சியாக தொடர் வெற்றிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மேலும், அத்தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. அதேபோல, 2010 வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்புமா என்பதே சென்னை அணி ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.