Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 23.02.2019

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்
23-02-2019, மாசி 11, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.11 வரை பின்பு பஞ்சமி பின்இரவு 06.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.47 வரை பின்பு சுவாதி. மரணயோகம் இரவு 10.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

mesham

                                                                          மேஷம்

.இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.

reshabam

                                                                          ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

3

                                                                              மிதுனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

 

kadagam

                                                                             கடகம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

5

 

                                                                              சிம்மம்

 

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

kannirasi

                                                         கன்னி

          இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.       

thulam

                                                                           துலாம்

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனஅமைதி இருக்கும்.

viruchagam

                                                                    விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

danush

         தனுசு

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.                                                                  

 

magaram

                                                                              மகரம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

kumbam

                                                                              கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 10.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

meenam

                                                                               மீனம்