Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 14.11.2018

Published on 13/11/2018 | Edited on 14/11/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001



14-11-2018, ஐப்பசி 28, புதன்கிழமை, நாள்முழுவதும் வளர்பிறை சப்தமி திதி. நாள்முழுவதும் திருவோணம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00
 

mesham

                                                                        மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.

reshabam

                                                                        ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

3

                                                                       மிதுனம்

 

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

kadagam

                                                                        கடகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

5

                                                                       சிம்மம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

kannirasi

                                                                        கன்னி
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

thulam

                                                                        துலாம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.

viruchagam

                                                                    விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலை பளு குறையும்.

danush

                                                                        தனுசு

 

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

magaram

                                                                         மகரம்

 

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

kumbam

                                                                        கும்பம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.

meenam

                                                                         மீனம்

இன்று புதிய முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.