Skip to main content

பாகிஸ்தான் மருத்துவர்கள் உடனே வெளியேற வேண்டும்- சவுதி அரசு உத்தரவு

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

பாகிஸ்தானில் முதுகலை மருத்துவ பட்டபடிப்பை படித்து தற்போது சவுதியில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களை உடனடியாக நாடு திரும்ப சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.
 

doctor

 

 

பாகிஸ்தானில், எம்.எஸ். மற்றும் எம்.டி போன்ற முதுகலை மருத்துவப் படிப்பின் தரம் மற்றும் பயிற்சி, சிறப்பானதாக இல்லாததால், அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபிய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
 

சவுதி அரேபியாவைத் தொடர்ந்து, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்