Skip to main content

வெள்ளை மாளிகைக்குள் சிக்கிய மர்மப் பொருள்; பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

mystery object found in White House near where guests enter West Wing

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகை உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட கட்டடமாகும். அந்த வெள்ளை மாளிகையில் நேற்று இரவு பவுடர் போன்ற பொருளை அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த  நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை.

 

இந்த பொருள் தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  இதனால் வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், முன் எச்சரிக்கைக்காக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டவர்கள் முதற்கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு நடந்த சோதனையில், அந்த மர்மப் பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.

 

பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பவுடர் போன்ற மர்மப் பொருள் என்ன என்பதைப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அந்த பரிசோதனையில், அந்த மர்மப் பொருள் கோகெய்ன் என்ற போதைப் பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்