Skip to main content

ஏவுகணை தாக்குதலில் மெக்கா... சவுதியில் உச்சகட்ட பதட்டம்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

சவுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனித தளமான மெக்காவை நோக்கி இரண்டு ஏவுகனைகள் பறந்து வந்ததால் சவுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

missiles destructed near makkah in saudi arabia

 

 

மெக்காவை நோக்கி வந்த இந்த இரண்டு ஏவுகணைகளும் சவுதி அரசால் தடுத்து அழிக்கப்பட்டன. ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஹவுத்தி புரட்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில்  உள்ள தயிப் மற்றும் ஜெட்டா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் மெக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் சவுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்