கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் (ஜி.எஸ்.கே) நிறுவனத்தின் இந்தியத் தாயாரிப்பான ஹார்லிக்ஸ் பிராண்டை ரூ 31,700 கோடிக்கு யூனிலிவர் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஆங்கிலோ-டச்சு நிறுவனத்தின் இந்தியா நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ரூ 31,700 கோடிக்கு ஜி.எஸ்.கே நிறுவனத்தின் தயாரிப்புகளான ஹார்லிக்ஸ், பூஸ்ட் மற்றும் விவா ஆகிய மூன்று பிராண்டுகளை வாங்கியுள்ளது. இதனுடன் சேர்ந்து ஜி.எஸ்.கே நிறுவனத்தில் இருக்கும் 4,000 பணியாளர்களும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் இந்தியாவில் ஏழு மில்லியன் சில்லறை கடைகளையும் தன்வசமாக்குகிறது ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம்.
இந்தியாவில் ஊட்டச்சத்துப் பொருள்களின் விற்பனையில் ஹார்லிக்ஸ் 43% விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஹார்லிக்ஸ் பிராண்ட் 140 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.