Skip to main content

தூய்மை இந்தியா என்று சொன்னீர்கள்... அதை செயல்படுத்திய மாணவன் இறந்ததுக்கு இரங்கல் கூட சொல்லவில்லையே நீங்கள்... எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

புதுக்கோட்டையில்  கணினி தமிழ்ச்சங்கம் சாப்பில் நடைபெற்ற இணையப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கலந்து கொண்டு பேசும்போது.. கேமரா வெளிச்சத்தைத் தாண்டி உண்மையிலேயே குப்பைகள் குவிந்துகிடக்கும் பகுதிகளுக்கு மோடி வரத்தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

 

writer adhvan dheetchanya speech


மேலும், இன்றைக்கு சமூக ஊடகங்களை பல்வேறு தரப்பினர் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 லட்சம் பேரை இத்துறையில் இறக்கி விட்டுள்ளது. இதர அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. என்றாலும் அன்றாடம் நாட்டில் எந்தப் பொருள் குறித்து விவாதிக்க வேண்டுமென இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அந்த அளவுக்கு ட்ரெண்டை உருவாக்குகிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி  மக்களின் மனநிலையை இவர்கள்தான்  தகவமைக்கிறார்கள்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பைவிட மோடி குப்பை பொருக்கிய செய்திதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. அவ்வளவு சுத்தமான குப்பைகள்  வேறு எங்கும் கிடைக்காது என்கிற அவரின் குப்பை சேகரிக்கும் பணி இருந்தது. கேமரா வெளிச்சத்தைத் தாண்டி உண்மையிலேயே குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதிக்கு அவர் வரத்தயாரா?
நாட்டில் வருடத்திற்கு 22 ஆயிரம் பேர் மலக்குழியில் இறக்கின்றனர். வருடத்திற்கு 65 ஆயிரம் டன் குப்பைகளை நாம் உருவாக்குகிறோம். பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நம்மால் ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஒருசில அடி ஆழத்தில் இருக்கும் மலத்தை அப்புறப்படுத்துவதற்கு நம்மால் எந்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்லிமிட்டெட் வாய்ஸ், அன்லிமிட்டெட் டேட்டா மூலம் எந்த நேரமும் செல்போனிலேயே இளைஞர்கள் மூழ்கிக்கிடக்கின்றனர். இது மனிதர் தங்கள் அருகாமையில் இருக்கும் உயிப்பான மனிதர்களோடு உறவாடுவது தடைப்பட்டு இருக்கிறது. ஒருசில நிமிடங்கள் டவர் இல்லையென்றால் உலகமே இருண்டுவிட்டதாக கவலைப்படுகிறோம். நமது சொந்த நாட்டுக்குள்ளே காஷ்மீர் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொலைத் தொடர்பு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு இருகிக்கின்றனர். இதுகுறித்து நாம் கவலைப்பட்டு இருக்கிறோமா? விவாதித்து இருக்கிறோமா. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறோமா?

நாட்டில் 58 சதவிகிதம் பேர் ஏதாவது ஒருவகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றான். இது மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இணைத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்துவதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆதவன் தீட்சண்யா பேசினார்.
 

மேலும் பிரதமர் மோடி அடிக்கடி சொல்லி வரும் தூய்மை இந்திய திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் ம் வகுப்பு படித்த மாணவன் ஸ்டீபன்ராஜ் (வயது 14). வானாலியில் மோடியின் தூய்மை இந்தியா பேச்சைக் கேட்டு பள்ளியை மட்டுமல்ல அவன் செல்லும் தெருக்களைக் கூட எந்த இடத்தில் குப்பை கிடந்தாலும் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லும் நல்ல செயலை செய்து வந்தான். பள்ளியும், கிராமமும் அந்த மாணவனை பாராட்டாத நாள் இல்லை. ஆனால் அவன் கடந்த வாரம் குளத்து நீரில் சிக்கி பாிதாபமாக உயிரிழந்துவிட்டான்.

உங்கள் திட்டத்தை அழகாக செய்த அந்த மாணவன் குடும்பத்திற்கு உங்கள் மத்திய அரசு செய்தது என்ன? ஏன் அந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்யக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.