Skip to main content

தனிநபர் கழிப்பறையால் பெண்களின் மானம் காக்கப்படுகிறது! பிரதமர் மோடியுடன் சேலம் பெண் நெகிழ்ச்சி!!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

modi

 

தூய்மை இந்தியா திட்டம் குறித்து, காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் மோடியுடன் பேசிய சேலம் பெண், 'தனிநபர் கழிப்பறையால் பெண்களின் மானம் காப்பாற்றப்பட்டு உள்ளது,' என்று நெகிழ்ச்சியாக கூறினார்.


சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் கிராமத்தில், தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'தூய்மையே உண்மையான சேவை' என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 15, 2018) காணொலி காட்சியின் மூலமாக துவக்கி வைத்தார். அப்போது நரேந்திர மோடி பேசுகையில், ''மஹாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி வரை இந்த திட்டம் செயல்படும். தூய்மையின் அவசியம் குறித்து அனைவரிடமும் பரப்ப வேண்டும். மஹாத்மா காந்தியின் கனவை நனவாக்க, நாம் அனைவரும் நாட்டை தூய்மைப்படுத்துவது அவசியம்.

 


நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும், தூய்மை சேவை முயற்சியில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். 2014ம் ஆண்டு நாட்டின் தூய்மை 40 சதவீதமாக இருந்தது. தற்போது அது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என்றார். இந்த திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் உரையாடினார்.

 

modi

 

தூய்மை பாரத தூததர்களான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர் ரத்தன் டாடா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மாதா அமிர்தானந்தமயி, ஸ்ரீரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பிரபலங்களும் காணொலி காட்சியின் வாயிலாக பேசினர்.

மணிவிழுந்தான் கிராமத்தில் பிரதமருடன் பொதுமக்கள், தூய்மை பாரத ஊக்குவிப்பாளர்கள் உரையாடவும், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காணொலி காட்சியின் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஊக்குவிப்பாளர் சுமதி பேசுகையில், ''நான் கடந்த 10 ஆண்டுகளாக சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறேன். சத்யாகிரஹா சே ஸ்வச்சதாகிரஹா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இவை எல்லாம் என்னை ஊக்கப்படுத்தியது. இத்திட்டம் துவங்குவதற்கு முன், எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் திறந்தவெளியில் மலம் கழித்தனர். 

 


பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறை கட்டினால் மானியம் வழங்கப்படும் என்றதால் பலர் ஆர்வமாக முன்வந்தனர். ஆனாலும், தனிநபர் கழிப்பறை குறித்து உணர்வுப்பூர்வமாக புரிய வைக்க எண்ணினோம். அதற்காக, 'தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பது மானியத்திற்காக அல்ல; மானத்திற்காக' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை செய்தோம். 

சார்ந்த செய்திகள்