Skip to main content

பிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...?

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

97-வது நாள்.   விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2வில் இன்று சனிக்கிழமை 97வது நாள். பிக்பாஸ்-1 100 நாள்தான்.  ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்ட நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதாவது சனிக்கிழமை ஒருவரும்,  ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.
 

bigboss 2

 

இந்நிலையில் தாடி பாலாஜியும், யாஷிகா ஆனந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல் வெற்றியாளர் தகுதிக்கு ஜனனிஐயரும்  ரித்விகாவும் இடையே கடும்போட்டி நிலவுவதாக தெரிகிறது. ஜனனி ஐயர் அல்லது ரித்விகா என இந்த இருவரில்  ஒருவர்தான் வெற்றிபெற இருக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்