Skip to main content

இவ்வளவு நேரமா யாருக்கிட்ட பேசுற... இடைஞ்சல் செய்த கணவருக்கு அரிவாள்மனையால் வெட்டு

Published on 26/09/2018 | Edited on 26/09/2018


 

Speaking


நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை தட்டிக் கேட்ட கணவனை அரிவாள்மனையால் வெட்டியுள்ளார் மனைவி. 
 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செல்வராகவன். 49 வயதாகும் இவருக்கு சுந்தரி (வயது 30) என்ற மனைவி உள்ளார். தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு செல்வராகவுன் மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, சுந்தரி யாரோ ஒரு ஆணிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதாக தெரிகிறது.
 

இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், இவ்வளவு நேரமா யாருக்கிட்ட பேசுற... என்று மனைவியை கண்டித்தார். அப்போது கபாலிக்கும், அவரது மனைவி கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 

கணவனுடனான கடும் வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சுந்தரி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கணவனின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டினார்.
 

வலியால் அலறித்துடித்தார் செல்வராகவன். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

பின்னர், தனது மனைவி செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன் பேசியதாகவும், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் மயிலாப்பூர் காவல்நிலயைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பெண் போலீசார் மீது தாக்குதல்; கணவன் கைது

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Attack on policewomen; Husband arrested

நேற்று காஞ்சிபுரத்தில் பெண் காவலரை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக நேற்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையில் இருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் போலீசார் மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

எதிர்பாராத கொடூர தாக்குதல்; நிலைகுலைந்த பெண் காவலர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Unexpected brutal attack; Deranged female cop

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். தம்பதியர் இருவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பெண் காவலர் டில்லி ராணி இன்று வழக்கம் போல் தனது பணியினை முடித்து விட்டு காவல்நிலையத்திலிருந்து பிற்பகல் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீருடையில் இருந்த டில்லி ராணியை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்தக் கொடூர தாக்குதலில் பெண் காவலர் டில்லி ராணியின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெண் காவலர் டில்லி ராணியை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் டில்லி ராணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Unexpected brutal attack; Deranged female cop

முதற்கட்ட விசாரணையில் தனது கணவர் மேகநாதன்தான் இச்செயலை செய்ததாக பெண் காவலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால் அவரது கணவரை முதலில் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு அவரை வலை வீசித் தேடி வருகின்றனர். ஏற்கெனவே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் பெண் காவலர் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பெண் காவலர் மனுவும் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில்தான், குடும்ப தகராறில் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் தனது மனைவியான டில்லி ராணியை, அவரது கணவர் மேகநாதன்தான் வெட்டி இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சீருடையில் இருந்த பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.