Skip to main content

விழுப்புரம் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
 

Viluppuram


 

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக லோகநாதனை, சங்கராபுரம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.


 

அதன்பேரில் லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்