Skip to main content

இரண்டு புலியைக் கொன்றவர் கைது! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Two tiger passes away case police arrested one

 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, புலிகள் இறந்து கிடந்த பகுதிக்கு அருகே பசுமாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், விலங்குகள் விஷம் வைத்து  கொல்லப்பட்டிருக்கலாம் எனவும்  சந்தேகம் எழுந்தது. இதனால், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தற்போது மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி நேரு நகர் பகுதியில் 8 வயதான புலியும் மற்றொரு வனப்பகுதியில் 3 வயதான மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தொடர்பான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை தெரிய வந்தது. இந்த பகுதிகளுக்கு அருகே மாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்துள்ளது. இது வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே விலங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர், நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

விலங்குகள் இறந்து கிடந்த பகுதியை சுற்றி வனத் துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது தான், அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவரின் மாடு சமீபத்தில் காணவில்லை என்பதனை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சேகரை வனத்துறையினர் விசாரிக்க தொடங்கினர். விசாரணையின் போது, சேகரின் மாடு வனவிலங்கால் தாக்குண்டு இறந்துள்ளதும். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் மாட்டின் உடலில் பூச்சி மருந்தை தடவியுள்ளதாக சேகர் வனத்துறையிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில், சேகர் கைது வனத்துறையினரால் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

மேலும், ஆனைக்கட்டி அருகே உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்திற்கும். கோயம்புத்தூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு புலிகளின் உறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், புலிகள் இறந்த காரணத்தை சரியாக கண்டறியப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்