Skip to main content

டன் கணக்கில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி! சிக்கிய கூலித் தொழிலாளி! 

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Tons of stored ration rice! Trapped wage worker!

 

ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குத் தமிழகத்தின் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியையடுத்த பன்னாரி புதூர் என்ற பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பண்ணாரி புதூர் பகுதியில் தீவிர சோதனை ஈடுபட்டனர். 

 

அப்போது ஓரிடத்தில் சோதனை செய்தபோது 2,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த செந்துரான்  என்ற கூலித்தொழிலாளி என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 2,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. செந்தூரன் யாருக்கு மொத்தமாக விற்பனை செய்ய வைத்திருந்தார், அந்த நபர் யார், அவர்களின் பின்னணி என்ன உள்ளிட்டவற்றைக் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்