Skip to main content

சிறுநீர் கழிப்பிடமாக மாறிய ருக்குவின் சமாதி

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
t


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வளர்ந்த ருக்கு யானை கடந்த மார்ச் மாதம் 21ந்தேதி சுவற்றில் முட்டி இறந்துப்போனது. இறந்துபோன அந்த ருக்கு யானையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியபின் ருக்கு யானை கோயில் வடஒத்தவாடை தெருவில் பெரிய அளவில் பள்ளம் எடுத்து அங்கு அடக்கம் செய்தனர்.


ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைத்து வைத்தனர். ஆனால் தற்போது அந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால் அந்த இடம் வாகனம் நிறுத்துமிடமாகவும், சிறுநீர் கழிக்குமிடமாகவும் மாறிவிட்டது. இதனால் வேதனையடைந்த பக்தர்கள் இதுப்பற்றி கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறிய அளவில் மேடையமைத்து ருக்குவின் புகைப்படம் வைத்து பக்தர்கள் வணங்கும் இடமாக மாற்ற அண்ணாமலையார் கோயில் அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான திட்ட அறிக்கையை அறநிலையத்துறைக்கு அனுப்பிவைத்தனர். அது கிடப்பில் உள்ளது. சாலையின் ஓரம் கோயில் கட்டுவது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது கிடப்பில் உள்ளது என்கின்றனர்.


அதேபோல் புதிய யானை கோயிலுக்கு வாங்க வேண்டும் என்கிற கருத்தும் அண்ணாமலையார் கோயில் சார்பில் அறநிலையத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் அதனை வனத்துறைக்கு அனுப்பி புதிய யானையை பெற வேண்டும். அந்த பணிகளும் நடக்காமல் அதுவும் அப்படியே கிடப்பில் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

சார்ந்த செய்திகள்