Skip to main content

வாக்கு எண்ணிக்கை - மண்டபங்கள், சமுதாயகூடங்களில் காத்திருக்கும் கட்சியினர்

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 


இந்தியா முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று மே 23ந்தேதி இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 39 ( பாண்டிச்சேரி உட்பட ) தேர்தல் நடந்து முடிந்தது. சரியாக ஒரு மாதத்துக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

p


திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி என இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள், திருவண்ணாமலை நகரத்தில் வைக்கப்பட்டுள்ளன.


திருவண்ணாமலை தொகுதிக்கான இயந்திரங்கள், மாவட்ட வேளாண்மை விற்பனை மையத்திலும், ஆரணி தொகுதிக்கான இயந்திரங்கள் சண்முகா மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன.


மே 23ந்தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதற்காக காலை சரியாக 7 மணிக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட்ட வாக்காளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதனால் தொகுதியின் பல பகுதிகளிலும் இருந்து திருவண்ணாமலை தொகுதி, ஆரணி தொகுதியின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் திருவண்ணாமலைக்கு வந்து முகாமிட்டுள்ளனர். அப்படி வந்தவர்களை லாட்ஜ், ஹோட்டல்களில் தங்கவைக்க முடியாது என திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், முகவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரம் கட்சிக்காரர்களால் திணறுகிறது.
 

சார்ந்த செய்திகள்