Skip to main content

கீழடியில்  வெளிநாட்டு அணிகலன்கள்..!!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

      கீழடியில் நடந்த 5ம் கட்ட அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள், நூல் கோர்க்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் ஆன பாசிமணிகள், இரும்பில் ஆன ஆயுதம், எலும்பில் செய்யப்பட்ட பொருட்களுடன் வெளிநாடுகளில் பெண்கள் அணியும் அணிகலன்களான அகெட் வகை பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

 

k

   

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்த 5ம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த ஜுன் 13ம் தேதி முதல் முருகேசன், கருப்பையா, மாரியம்மாள் மற்றும் போதகுரு ஆகியோர் நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டு தொடர்ச்சியாக 53 நாட்கள் அகழாய்வு நடக்கப்படவுள்ளது.

 

k

 

இதில் மை தீட்ட பயன்படும் குச்சி, குறுகிய வடிவிலான பானை கழுத்து பகுதி, பானை ஓடுகள், பானைகள், பானை மூடி, இரட்டைச்சுவர், உறைகிணறு, எலும்புகள், பாசி, பவளம் உள்ளிட்டவைகள் கிடைத்தன.

kk

 

இது இப்படியிருக்க, ஏற்கனவே நிலம் கொடுத்த மாரியம்மள் நிலத்தின் அருகே அவரது சகோதரி நீதிக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் தென்னந்தோப்புடன் கூடிய நிலத்தில் சமீபத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டு இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அதிலும் கட்டடச் சுவர், நீண்ட எலும்பு, அம்மி குழவி உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.

kk

 

 தொய்வில்லாமல் சீராக நடந்துக் கொண்டிருக்கும் அகழாய்வில், மேலை நாடுகளின் நாகரீகம் இங்கிருந்து தான் சென்றதிற்கு அடையாளமாக வெளிநாடுகளில் பெண்கள் அணியும் அணிகலன்களான அகெட் வகை அணிகலன்களும் கிடைத்து தொல்லியல் துறையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளன. இவை அனைத்தையும் சேகரித்த தொல்லியல்துறையினர் பொருட்களின் காலம் கண்டறிய வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலையினை செய்து வருகின்றனர். இது தமிழர்கள் மத்தியில் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்