திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் திண்டுக்கல், நத்தம் ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஆகிய ஏழு ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அந்த ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்என்எல் கல்லூரி, எம்.பி.எம் முத்தையா பிள்ளை கலைக்கல்லூரி உள்பட சில இடங்களில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக நாளை 30ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், தெப்பம்பட்டி, வேடசந்தூர், குஜிலம்பாரை, வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இதற்காக 90 மண்டல மண்டலங்களில் 631 மையங்களில் 997 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுபோல் தேனி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது.
இதில் 898 பதவிகளுக்கு 585 வாக்குச்சாவடிகளில் நாளை 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இந்த இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவுக்கு தேவையானபொருட்கள் வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதுபோல் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.