Skip to main content

19000-ம் லிட்டர் டீசலோடு பள்ளத்தில் விழுந்த டேங்கர் லாரி

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
diesel lorry



சென்னையில் இருந்து மதுரைக்கு நையாரா என்ற தனியார் நிறுவனத்தின் 19000-ம் லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகே டோல்கேட்டை நோக்கி அதிகாலை சுமார் 4:30 மணிக்கு சென்றுகொண்டு இருந்தது. அப்போது டேங்கர் லாரி திடிரென்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சுமார் 20 அடி ஆழம் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புர விழுநதது.
 

டேங்கர் லாரி கவிழ்ந்ததில் டீசல் ஆறாக ஓடுகின்றது. ஒட்டுநர் காளியப்பன், கிளீனர் சதீஷ் ஆகியோர் லாரியில் இருந்து குதித்து தப்பினர். இதில் 22 வயதான கிளீனருக்கு கை உடைந்தது. டிரைவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் உளுதூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

விபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 
 


 

சார்ந்த செய்திகள்