Skip to main content

"பொல்லானின் பிறந்த தினம் இனி அரசு விழா!" - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Published on 15/02/2021 | Edited on 16/02/2021

 

tamilnadu cm speech at namakkal district

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வளையகாரனூரில் நடந்த அருந்ததியர் அரசியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சுதந்திரப் போராட்ட வீரரும், தீரன் சின்னமலையின் படையில் இருந்தவருமான பொல்லானின் பிறந்த தினம், அரசு விழாவாகக் கொண்டாடப்படும். பொல்லானுக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபமும் அமைக்கப்படும். சொந்த வீடு இல்லாத 50,000 பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சிதான் அ.தி.மு.க. அருந்ததியர் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் சாலை, நவீனக் கழிவறை அமைக்கப்படும். வீட்டுமனையில்லாத அனைத்துப் பட்டியலின மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்" என்றார்.

 

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், சரோஜா மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்