Skip to main content

சிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

 Sivachandran's body is buried with govt respect

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் சிவசந்திரன் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது. 

 

 

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன்  உடல் இன்று காலை 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.  ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் வீரர் சிவச்சந்திரனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்பதிவில்லா பெட்டியில் துணை ராணுவப்படை செய்த அட்டூழியம்; துப்பாக்கியை வைத்து மிரட்டல்

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 Paramilitary forces committed atrocity in unbooked box; Threats with a firearm

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை துணை ராணுவ படையினர் மிரட்டிய சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் ஏறினர். அங்கிருந்த பயணிகளிடம் தாங்கள் பணிகளை முடித்துவிட்டு திரும்புவதால் தங்களுக்காக இந்த முன்பதிவில்லாத பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ரயில் கிளம்பிய உடன் மது அருந்திய துணை ராணுவ படையினர், சீட்டு விளையாடுவதோடு அதிக கூச்சல் எழுப்பி அங்கிருந்த பயணிகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் தட்டி கேட்டபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  துணை ராணுவத்தினர் மதுபோதையில் துப்பாக்கியை எடுத்துக்காட்டி மிரட்டியதாகவும், ஒருவரை காலணியால் அடித்து தாக்கியதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது பயணிகள் அவசர செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன் பின்னர் கீழே இறங்கிய பணிகள் இது குறித்து கேட்ட பொழுது துணை இராணுவத்தினர் அங்கிருந்த பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கையிலிருந்த மது பாட்டில், காலணி ஆகியவற்றைக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. மக்களை காக்க கூடிய ராணுவ வீரர்களே இப்படி பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.