Skip to main content

சூர்யா சிங்கம்; பாலச்சந்திரன் அசிங்கம்! -மாணவியிடம் அத்துமீறி கைதான ஆசிரியர்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

சிங்கம் 2 திரைப்படத்தில் பள்ளி என்.சி.சி. ஆசிரியர் சூர்யாவை, மாணவி ஹன்சிகா ஒருதலையாய் காதலிப்பார். ஒருகட்டத்தில் காதலை ஹன்சிகா நேரடியாக வெளிப்படுத்த, “ஆசிரியரும் மாணவியும் காதலிப்பது தவறு..” என்று அறிவுறுத்தி, கறாராக மறுத்துவிடுவார் சூர்யா. 

 

s

 

‘அது சினிமா.. நிஜத்தில் நடப்பதோ வேறு..’ எனச் சொல்லும் விதமாக, சேலத்தில் உள்ள வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பாலச்சந்திரன், மாணவி மஞ்சுளாதேவியிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்ந்து காதலை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.  ‘அது காதலே அல்ல; அதற்கும் மேல்!’ என்கிற ரீதியில்தான், அவர் நடந்திருக்கிறார்.  அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்.

 

பாலச்சந்திரன் பண்ணிய வில்லங்க விவகாரம் இது - 

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அந்தப் பெற்றோர், தங்கள் மகள் மஞ்சுளாதேவி, 11 மற்றும் 12-வது வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், சேலம், வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.  அங்கு உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் பாலச்சந்திரன், 23 வயதே ஆன இளைஞர் ஆவார். கடுமையான பாடச்சுமையிலிருந்து விடுபட முடியாமல் மாணவி மஞ்சுளாதேவி தவித்துவந்தது அவருக்கு வசதியாகப்போனது. தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.

 

 

 இந்தநிலையில், பிளஸ் 2 படிப்பை முடித்த அந்த மாணவி சொந்த ஊருக்குத் திரும்பி, கல்லூரியிலும் சேர்ந்துவிட்டார். பாலச்சந்திரனோ, எப்போதும் மாணவியின் நினைப்பிலேயே இருந்திருக்கிறார். கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து அந்த மாணவியைச் சந்தித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், என்.சுந்தரராஜபுரத்தில் உள்ள அந்த மாணவி குடும்பத்தினருக்குச் சொந்தமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தனிமையில் இருந்ததால், வழக்கம்போல் பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார்.  

 

17 வயது சிறுமியான தங்கள் மகளிடம் பாலச்சந்திரன் கெட்ட நோக்கத்துடன் தொடர்ந்து பழகிவந்ததை அறிந்த பெற்றோர் துடித்துப்போனார்கள். அதுவும் தங்களின் தோட்டத்திலேயே, மகளுக்குத் தொந்தரவு தந்ததைக் கண்டு கொதித்தனர். இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். 

 

வேலியே பயிரை மேய்ந்ததுபோல், ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தும்  ஒழுக்கக்கேடாக நடந்ததால், போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார் பாலச்சந்திரன்.

சார்ந்த செய்திகள்