Skip to main content

ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்-செல்லூர் கே.ராஜு பேட்டி

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது,

மகாத்மா காந்தி அவர்களை மறக்கக்கூடாது. அவர் தான் முதலில் கிராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர். இன்று பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக, துணைத்தலைவராக அமர்ந்திருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கலைஞர், இவர்களை வாழ்க்கையில் மறக்க கூடாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழி தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் நமது முதல்வர்.

 

sellurraju interview


அதேபோல கிராமப்புறங்களிலிருந்து பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். பிரதமரே காசோலையில் கையெழுத்திட முடியாது ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்து இட கூடிய அதிகாரம் உள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி அவரை நாம் மறக்கக் கூடாது. தற்பொழுது எது நடந்தாலும் மக்கள் உடனடியாக வாட்ஸப்பில் செய்திகளைப் பரப்புகிறார்கள். அதனால் தலைவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு தேவையான பணிகளை நாம் செய்ய முடியும். இந்த நாட்டுக்கு சேவையாற்றியதில் கருணாநிதி அவர்களுக்கும் பங்கு உண்டு அதை நான் மறுக்க முடியாது என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,

ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை மறக்க கூடாது. எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? துரைமுருகன் தான் திமுகவிற்கு தலைவராக வந்திருக்க வேண்டும். எங்களை குறை சொல்வதற்கு துரைமுருகனுக்கு எந்த அருகதையும் கிடையாது. 

ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. மாபெரும் தலைவரின் போராட்டத்தின் பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தை பொறுத்தவரை நழுவிப் போய் கொண்டிருக்கிறது. துரைமுருகனுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா, சட்டமன்ற தலைவர் பதவி கூட வழங்க மாட்டேங்கிறார் ஸ்டாலின் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்