Skip to main content

சிங்கப்பூர் சாமியாரை பழித்தீர்த்த ருத்ர சாமியார்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Rudra preacher to blame the preacher of Singapore!

 

தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சிங்கப்பூர் சென்று பக்தருக்கு ஆசி வழங்கிய இடத்தில், அம்மணமாக அடித்துவிரட்டப்பட்ட வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ஊருக்கு வந்த தமிழக சாமியார், சிங்கப்பூர் சாமியாரை பழி தீர்ப்பதற்காக நடத்திய யாகமும் பயங்கர காமெடியில் முடிந்துள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தில் வசித்து வருபவர் ருத்ர சித்தர். (கடந்த வீடியோவில், ருத்ர சித்தரை கோவண சித்தர் என தவறுதலாக குறிப்பிட்டுள்ளோம். கோவண சித்தர் என்பவர் வேறொருவர் என்பது குறிப்பிடத்தக்கது) இவர், 15 வருடத்திற்கும் மேலாக, கார்காவயலில் கோவில் கட்டி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் எனச் சொல்லப்படுகிறது. இவர் தற்போது ருத்ர சித்தராக அருள் பாவித்து வருகிறாராம். இவர் தொட்டால் எல்லா வியாதிகளும் குணமாகும் என சொல்லப்பட்டது. தன்னை பார்க்கவரும் பக்தர்களை வரிசையில் வரச்சொல்லும் இவர், ஒவ்வொருவருக்கும் விபூதி போட்டு அடிவயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதிக்கிறார். பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்பும் அப்பாவி பக்தர்கள் சிலர், தாங்கமுடியாத வலியுடன் கண்ணீரை அடக்கிக்கொண்டு சிரித்தவாறு செல்கின்றனர். அது வலி வேற டிபார்ட்மென்ட் என தட்டுத் தடுமாறி வீடு போய் சேர்கின்றனர்.

 

இப்படி, அப்பாவி மக்களின் நம்பிக்கையை பெற்ற ருத்ர சித்தரின் கிராஃப் விறுவிறுவென எகிறியது. இதையடுத்து, உள்ளூர் பிரச்சனைகளை விட உலக பிரச்சனைகளை சரிசெய்வதிலேயே சாமியார் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் ருத்ர சாமியாருக்கு மவுஸ் கூடியது. அப்படித்தான், சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்ல எனக் கூறி, ருத்ர சாமியாரை தனது சொந்த செலவிலேயே சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதை நம்பி.. சிங்கப்பூருக்கு பறந்துள்ளார் ருத்ர சாமியார்.

 

எங்கே உனது சகோதரன்.. நான் சரியாக்குகிறேன்.. என ஜம்பமாக பக்தரின் வீட்டுக்குள் நுழைந்த சாமியாருக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. அங்கே ஏற்கனவே சிங்கப்பூர் சாமியார் ஒருவர் நாற்காலியில் நிறைந்து இருந்துள்ளார். என்னடா பக்தா என்ன கோர்த்துவிட்டுட்ட என்கிற ரீதியில், பாவமாக பார்த்த ருத்ர சித்தரை, சிங்கப்பூர் சாமியார் புரட்டி எடுத்துள்ளார். இருவருக்குள்ளும் யார் ஒரிஜினல் சாமியார் எனும் போட்டி களைகட்ட, ருத்ர சாமியாருடன் சென்றிருந்த பெண் சீடர் பரிதவித்து போனார். ஒருகட்டத்தில், ருத்ர சாமியாரின் வேட்டியை உட்கார்ந்துகொண்டே உருவிய சிங்கப்பூர் சாமியார், அவரை அம்மணமாக்கி விரட்டியடித்தார்.

 

வாடா... நீ வாடா.. எங்க ஏரியாவுக்கு வாடா என்கிற தொனியில் சிங்கப்பூர் சாமியை திட்டிக்கொண்டே, அம்மணமாக காரில் பறந்தார் நம்ம ஊர் ருத்ர சாமியார். இந்த நிலையில், வெளிநாட்டில் நடந்த சம்பவம் தனது இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக கருதிய ருத்ர சாமியார், இதை எப்படியாவது ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக, யாக யோசனையை கையில் எடுத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி, யாக குண்டத்தில் இறங்கியுள்ளார். இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். நெருப்புக்கு நடுவில் சித்தர் இறங்கப்போகிறார்.. அதிசயங்கள் நடக்கப்போகிறது என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நைஸாக யாக குண்டத்தில் இருந்த விறகுகளின் மீது சிறிது நேரம் சிரித்தவாறு நின்ற சித்தர், மெதுவாக டேக் ஆஃப் ஆனார். 

 

இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டதன் பின்னணியில், சிங்கப்பூர் சாமியாரை பழிதீர்க்கும் திட்டம் இருப்பதாகவே அந்த பகுதி மக்கள் கிசுகிசுக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்