Skip to main content

இட ஒதுக்கீடு கட்டாயம்... மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு உத்தரவு!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Reservation Mandatory ... Order for Matriculation Schools!

 

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் 31 சதவிகிதம், எஸ்.டி 1 சதவிகிதம், எஸ்சி 18 சதவிகிதம், எம்பிசி 20 சதவிகிதம், பிசிஎம் 3.5 சதவிகிதம், பிசி 26.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்