இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டைக்கு அரசு பேருந்தில் பெண் ஒருவர் கை குழந்தையுடன் வந்து இறங்கினார். அப்போது அவர் பேருந்தில் இருந்து கைது குழந்தையுடன் இறங்கும்போது கையில் வைத்திருந்த மணிபர்ஸையும் அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் தவறிவிட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் பணத்தை தவறவிட்ட பெண் துடிதுடித்து கதறி அழுதுள்ளார். அதேநேரத்தில் உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அகிலன் அவர்களுக்கு செல்போனில் தோடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். உடனே இரவு ரோந்து போலீசார்கள் உதவி ஆய்வாளர் அகிலன், தலைமை காவலர் ஜாப்பர் மற்றும் போலீசார் தேவநாதன் ஆகிய போலீசார் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒவ்வொறு பேருந்தாக சோதனை செய்தனர்.
அப்போது கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை சென்ற அரசு பேருந்தில் தவறிவிட்ட மணிபர்ஸும், பத்தாயிரம் பணமும் கிடைத்தது. உடனே போலீசார்கள் 30 நிமிடத்தில் பணத்தை மீட்டு அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரவைத்து ரூபாய் பத்தாயிரம் பணத்தையும், மணிபர்ஸையும் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார்கள் பணத்தை தவறிவிட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
அப்போது பணத்தை பெற்ற பெண் கை குழந்தையுடன் கண்ணீர் விட்டு அழுதபடியே காவல்துறைக்கு மிகவும் நன்றி தெரிவித்தார். கருவேப்பிலங்குறிச்சி எடக்கல் சிதம்பரம், திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், எடைக்கல் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக சிறப்பாக பணி செய்து வருகிறார். பல்வேறு கிரைம் சம்பவங்களை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை புலனாய்வு செய்து கைது செய்துள்ளார். பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் உற்ற நண்பனாக இருந்து செயல்படுவதோடு உயர் அதிகாரிகளிடம் பலமுறை பாராட்டைப் பெற்றுள்ளார்.
அவரது துரிதசெயல்பாட்டின் மூலம் மேற்படி பணத்தை கண்டுபிடித்து உரிய அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளது கேள்விப்பட்டதும் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் அகிலனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.