Skip to main content

உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்திற்கு நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Relief to family of deceased kabaddi coach; Chief Minister's announcement

 

உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 

குளித்தலை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் (வயது26) என்பவருக்கு சிறிது நெஞ்சுவலி இருந்துள்ளது. நெஞ்சு வலிப்பது தெரிந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

 

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடந்து மேல்சிகிசைக்காக அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

 

இந்நிலையில், உயிரிழந்த பயிற்சியாளரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சியாளர் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களிடம் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனச் செய்தி வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்'-பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu Chief Minister's letter to Prime Minister Modi: 'We want a caste census'

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையும்  ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் நகலை கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.

1931-ல் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு சமகாலத் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு இதனை நிறைவேற்றுவார் என்று எதிர்நோக்குகிறேன். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் குறிப்பாக விளிம்பு நிலை மக்களை சென்றடைய வேண்டும். பின்தங்கிய மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கை வகுக்க சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையாக இருக்கும். சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்து வருகிறது. சாதி அடிப்படையிலான சமூக பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுவெளியில் கிடைக்கச் செய்வது அவசியம்' என தெரிவித்துள்ளார். 

Next Story

'விரைவில் விசாரிக்கும் நோக்கத்திற்காகத் தான் சிபிசிஐடி'-ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
'CBCID is aiming to investigate quickly' - RS Bharati interview

அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ''2016-ல் 570 கோடி ரூபாய் நடு ரோட்டில் கண்டெய்னர் லாரியில் பணத்தை பிடித்து  இதுவரையில் ஏறத்தாழ 8 வருடம் ஆகிறது. இதனை சிபிஐ தான் விசாரிக்கிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பொழுது சிபிஐ இன்வெஸ்டிகேஷன் கேட்கவில்லை. நீதிமன்றமே சிபிஐ விசாரணை கொடுத்தது.

டெல்லியில் நேரடியாக போய் சிபிஐ இடத்தில் கேட்டேன் ஆனால் எட்டு வருடம் ஆகிறது 570 கோடி ரூபாய் யாருடைய பணம் என்பதை இதுவரையில் சொல்லவும் இல்லை, அதற்கான எஃப்.ஐ.ஆரையும் சிபிஐ போடவில்லை. இப்படி பல வழக்குகள் தமிழ்நாட்டில் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே சிபிசிஐடி விசாரணை என்றால் துரிதமாக முடிக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் முதல்வர் கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியையும்  அமைத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி 'சிபிஐ... சிபிஐ..'. என்று திருப்பி திருப்பி கேட்கிறார். கேட்டால் சிபிசிஐடி காவல் துறை மீது நம்பிக்கையே இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஸ்டே வாங்கி விட்டார். பிறகு 2022-ல் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏற்கனவே விசாரித்தது சரியில்லை என்பதற்காக ஸ்டேட் போலீஸ் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்தார்கள்.

காவல்துறையின் சார்பாக விசாரித்து வந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. நான் தனிப்பட்ட முறையில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அதனுடைய அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றது. காவல்துறையும் அதனை விசாரிக்கும் காரணத்தினால் ஒரே வழக்கிற்கு இரண்டு பேர் தேவையில்லை என்று நான் அந்த மனுவை திரும்ப பெறுகிறேன் என்று சொன்னேன். இது ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது டான்சி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தான் திமுக சார்பில் தொடர்ந்தேன். அதனுடைய வரலாறு உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கை போட்டார் என்பதற்காக சண்முகசுந்தரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு அரசு ஊழியர் செய்ய முடியாத செயலை செய்தால் 169 சட்டப்பிரிவின்படி தண்டிக்கலாம். அந்த வழக்கை நாங்கள் தான் முதல்முறை சைதாப்பேட்டை கோர்ட்டில் போட்டபோது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜெயலலிதாவிற்கு சம்மன்  அனுப்பினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் போய் அதற்கு ஸ்டே கேட்டார். நீதிபதி ஸ்டே கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும் ஸ்டே கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார். அதனால் என்னென்ன கஷ்டங்களை நீதிபதி அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் நாட்டிற்கும் தெரியும்'' என்றார்.