Skip to main content

ரஜினி கருத்துக்கு இல.கணேசன் ஆதரவு

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது,

உ.பி. மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. தோல்விக்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்வோம். கர்நாடகத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சி சதி செய்து ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.

 

Rajini's support


 

முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் பயத்தில் இருப்பார்கள். இப்போது இளைஞர்கள் வெளியே சென்றால் பெற்றோர் பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பது தான். எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்கள் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. வீட்டையும், நாட்டையும் தாங்கும் தூண் போல் செயல்பட வேண்டும்.
 

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான். போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். அவர்களை தூண்டி விட்ட சதிகாரர்கள் யார் என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்