Skip to main content

புதுக்கோட்டை காவல்துறை அலட்சியம்.. மண்ணோடு மண்ணாகும் சாலை தடுப்புகள்..

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
police

 

  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு கயிறுகளையும் தடுப்பு கட்டைகளையும் பயன்படுத்திவந்த போலிசார் தற்போது இரும்பு சாலை தடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரும்பு தடுப்புகள் வாங்க அரசாங்கமும் நிதி ஒதுக்குகிறது பிரபலமான நிறுவனங்களும் நிதி கொடுக்கிறது. திடீரென மக்கள் போராட்டம் என்றாலும் இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்துவிடும் வல்லமை போலிசாரிடம் உள்ளது.


 அதே போல தான் திருவிழா, முதலமைச்சர் வருகை, எதிர்கட்சி கூட்டங்கள் என்று எங்கே மக்கள் கூடினால் இரும்பு தடுப்புகளே முன்னால் வரும்.


    
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஒரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மக்கள் போராட்டம் மறு பக்கம் ஜல்லிக்கட்டு இது தினசரி நிகழ்வாக உள்ளது. மக்கள் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருப்பார்கள் 3 மாதங்களாக புதுக்கோட்டை மாவட்ட நிலைமை இதுதான் என்றாலும் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும்.

 


   இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ரசிகர்களின்  பாதுகாப்புக்காக தடுப்புக் கட்டைகள் அமைத்தாலும் இரும்பு தடுப்புகளையும் லாரிகளில் ஏற்றிச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள் மாவட்ட போலிசார்.

 

 ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த தடுப்புகளை மறுபடியும் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல ஏனோ காவல் துறைக்கு மனம்வரவில்லை. அதனால் 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் கூட இரும்பு தடுப்புகள் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது.


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குளக்கரையில் பிப்ரவரி 25 ந் தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர், ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவரும் கலந்து கொண்டார்கள். அந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கு கொண்டு சென்ற இரும்பு தடுப்புகள் ஆங்காங்கே கிடந்து உடைந்து துருப்பிடித்து ம்ணோடு மண்ணாகிறது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதும்.
  

 சில காவலர்களே.. இரும்பு தடுப்புகள் செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்குது. பல பிரபலமான தனியார் நிறுவனங்களும  நிதி கொடுக்கிறதால அதை பாதுகாக்கும் எண்ணம் குறைந்துவிட்டது. தேவைக்கு ஏற்ப புதுசாவே வாங்குவோம். அந்த டெண்டரை ஒரு மாண்புமிகு தான் எடுத்து செய்றார் என்றனர். 


மக்கள் வரிப்பணம் மண்ணோடு மண்ணாகலாமா? மாவட்ட காவல் நிர்வாகம கவணிக்குமா?
  

சார்ந்த செய்திகள்