Skip to main content

மூலப்பொருட்களின் விலை உயர்வால், தீப்பெட்டி பண்டல்களின் விலையும் உயர்கிறது!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

As the price of raw materials goes up, so does the price of matchbox bundles!

 

மூலப்பொருட்களின் விலை 30% முதல் 40% வரை உயர்ந்திருப்பதால், தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

 

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பாஸ்பரஸ், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 30% முதல் 40% வரை உயர்ந்திருப்பதால், உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றன.

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலுக்கு தற்போது ரூபாய் 300 என விற்பனை செய்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 350 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்