Skip to main content

ஒரு பல்பை திருட உடற்பயிற்சி செய்வதுபோல் பாசாங்கு!! இணையத்தில் வைரலாகும் சிசிடிவி வீடியோ

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

கோவையில் ஒரு கடையின் வெளியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

cctv

 

cctv

 

 

 

அந்த சிசிடிவி வீடியோ காட்சியில் ஒரு நடுத்தர வயதுடைய ஒருவர் அதிகாலையில்  ஒரு கடையின் முன் பகுதியில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த வீடியோவை பார்ப்போர் மனத்தில் ஒரு மனிதர் தன் உடல்மேல் உள்ள அக்கறையில் அதுவும் அதிகாலை நேரத்தில் இப்படி உடற்பயிற்சி செய்கிறாரே என தோன்றும் அளவிற்கு இருந்தது.

 

 

 

தீடீரென்று அந்த மனிதர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த பல்பை பிடித்து தொங்கிக்கொண்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம்  உடற்பயிற்சி செய்தார் என்ன ஒரு ஈடுபாடு என நினைக்கும் நேரத்தில் அந்த பல்பை அப்படியே லாவகமாக திருடி தனது லோயர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நகர்ந்தார்.

 

அப்பொழுது இவ்வளவு உடற்பயிற்சி பாசாங்கும் அந்த பல்பை  திருடத்தானா? என்று இருந்தது. அப்படி ஒரு லாவகத்தை காட்டி பல்பை திருடியுள்ளார். இந்த வீடியோ சிரிப்பையும் இப்படியெல்லாமா நாட்டில் நடக்கிறது என எண்ணும் வகையில் இணையத்தை கலக்கி வருகிறது.

சார்ந்த செய்திகள்