Skip to main content

சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

President visit to Chennai Welcome by the Chief Minister

 

சென்னை வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர், முதல்வர்  ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் சிங்காரா விமானப்படைத் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு மசினகுடி வந்தடைந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்தார். அதன் பிறகு மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து சென்னை விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.

 

இதையடுத்து குடியரசுத் தலைவர் நாளை (6.8.2022) சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, உரை நிகழ்த்தவுள்ளார். பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், மறுநாள் திங்கட்கிழமை (7.8.2023) அன்று காலை புதுச்சேரிக்கு செல்லவுள்ளார். குடியரசுத் தலைவர் சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்