Skip to main content

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி முதுநிலை மாணவர் சேர்க்கையில் கட்டணக் கொள்ளை- அதிர்ச்சியில் பெற்றோர்

Published on 15/06/2018 | Edited on 16/06/2018

 

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் தற்போது முதுநிலை மாணவர் சேர்க்கை பல்வேறு பாடங்களுக்கு தற்போது (2018-19) நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு (2017-18) மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் ரூ.8000/. என்று இருந்தது. தற்போது 13,000/- என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கட்டணங்கள் இணையம் வழியாக மட்டுமே செலுத்தமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கட்டண விவரங்கள் முழுமையாக இணையத்தில் இல்லை. Other Fess ரூ.7200/- என்று குறிக்கப்பட்டுள்ளது. பிற கட்டணம் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. 

tree

 

கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பருவக் கட்டணம் (Semester Fees). தேர்வுக் கட்டணம் போன்றவை SBI Town Branchஇல் கல்லூரி வங்கிக் கணக்கில், கல்லூரியில் வழங்கப்படும் சலான் வழியாக மாணவர்களால் செலுத்தப்பட்டு வந்தது. தற்போதைய இந்தக் கல்வியாண்டில் (2018-19) இணையம் வழியாக மட்டுமே சேர்க்கைக் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற அடிப்படையில் இணையத்தில் பணம் செலுத்தச் சென்றால் PayU என்னும் தனியார் நிறுவனம் வழியாக செலுத்த அறிவிப்பு வருகிறது. 

 

அதில் மாணவர் சேர்க்கைக் கட்டணம், தனியார் நிறுவனத்திற்கான சேவைக் கட்டணம் மற்றும் GST என்று 168 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது.

 

Pleasuring in the Trio Hollicos College Senior Masters - Parents in Shock


 

கல்லூரிக்கு என State Bank of India, Trichy Town Branchஇல் மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற 10322364016, 10322364083, 10322364323, 10322364492, 10322364072 என வங்கிக் கணக்குகள் உள்ளன. ஆனால் PayU என்னும் தனியார் நிறுவனம் வழியாக கட்டணம் செலுத்துவதால் பெற்றோர்களுக்குத் தேவையில்லாமல் 168ரூபாய் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் 5000 அதிகம் சேர்க்கைக் கட்டணம் செலுத்தும் நிலையில், தனியார் வழியாக கட்டணம் செலுத்த கல்லூரி நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கியது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

cross

 

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெறும் அனைத்து முதுநிலைப் பாடங்களும் அரசு உதவிபெறும் (Govt. Aided) பிரிவின் கீழ்தான் உள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வுக்கு திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று விதி உள்ளது. அனுமதி பெற்றிருந்தால் மாணவர்களிடமிருந்து பெறப்படும் கட்டணங்களுக்கு உரிய விளக்கங்கள் இருந்திருக்கும். திருச்சி RJD அனுமதி இல்லாமல் இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பெற்றோர் கருதுகின்றனர்.

 

வங்கி வழியாக கட்டணம் பெறுவதற்குப் பதிலாக இணையம் வழி கட்டணம் பெறவும் RJD யின் அனுமதி இல்லாமல் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்குள்.. ஹோலிகிராஸ் கல்லூரி நிர்வாகம் புதிய கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். தனியார் இணையம் வழி கட்டணம் செலுத்தும் முறையைக் கைவிட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

சார்ந்த செய்திகள்